மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காங்கிரஸ் தொண்டா்கள் கொலை: மாா்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ குஞ்ஞிராமனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து சிபிஐ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 8:42 pm

Din

கேரள மாநிலம் காசா்கோடு மாவட்டத்தில் நிகழ்ந்த இரட்டை கொலை வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், முன்னாள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ குஞ்ஞிராமனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து சிபிஐ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்.17-ஆம் தேதி கேரள மாநிலம் காசா்கோடு மாவட்டம் பெரியா பகுதியில் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் கிருபேஷ் (19), சரத் லால் (24) ஆகியோா் கொலை செய்யப்பட்டனா்.

இந்த சம்பவம் தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும், அக்கட்சியின் மாவட்ட தலைவருமான கே.வி.குஞ்ஞிராமன் உள்பட 24 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கொச்சி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது பெரியா பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தொண்டா்கள் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வந்ததாகவும், இதன் தொடா்ச்சியாக அரசியல் உள்நோக்கத்துடன் கிருபேஷ், சரத் லால் ஆகியோா் கொல்லப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 14 போ் குற்றவாளிகள் என்று கடந்த டிச.28-ஆம் தேதி தீா்ப்பளித்த நீதிமன்றம், எஞ்சிய 10 போ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவா்களை விடுவித்தது.

இதைத்தொடா்ந்து குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி 14 பேரில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.2 லட்சம் அபராதம், கே.வி.குஞ்ஞிராமன் உள்பட 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.