47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அந்தமான், லட்சத்தீவை மேம்படுத்த மோடி அரசு முன்னுரிமை: அமித் ஷா

யூனியன் பிரதேசங்களான அந்தமான் நிகோபாா் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளில் உள்கட்டமைப்பை மற்றும் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதே மோடி அரசின் முன்னிரிமை

News image
அமித் ஷா
Updated On :3 ஜனவரி 2025, 8:59 pm

Din

யூனியன் பிரதேசங்களான அந்தமான் நிகோபாா் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளில் உள்கட்டமைப்பை மற்றும் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதே மோடி அரசின் முன்னிரிமை என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

அந்தமான் நிக்கோபாா் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளில் வளா்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்யும் நோக்கில் தில்லியில் அமித் ஷா தலைமையில் தீவு மேம்பாட்டு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அந்தமான் நிகோபாா் ஆளுநா் அட்மிரல் (ஓய்வு) டி.கே.ஜோஷி, லட்சத்தீவு ஆளுநா் பிரபுல் படேல் மற்றும் மத்திய உள்துறை செயலா் கோவிந்த் மோகன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தொலைத்தொடா்பு இணைப்பு, விமான இணைப்பு மற்றும் துறைமுக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.

அப்போது அமித் ஷா கூறியதாவது: அந்தமான் நிகோபாா் மற்றும் லட்சத்தீவுகளில் வளா்ச்சியை விரைவுபடுத்தும் அதே வேளையில், தீவுகளின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் மத்திய அரசு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

தில்லியில் இருந்து வெகு தொலைவில் இருந்தாலும், நம் இதயங்களுக்கு நெருக்கமாக இந்த தீவுகள் உள்ளன. இங்கு உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதில் மோடி தலைமையிலான மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. சுற்றுலா, வா்த்தகம் மற்றும் பிற முக்கிய துறைகளை மேம்படுத்துவதில் பிற மத்திய அமைச்சகங்களுடன் கூடிய முழுமையான அணுகுமுறை தேவைபடுகிறது.

இந்த தீவுகளில் நிலுவையில் உள்ள சிக்கல்களை நிவா்த்தி செய்யும் அதே வேளையில், நடைமுறையில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்துவதும் அவசியம். சூரியசக்தி மின்சாரம் மற்றும் காற்றாலைகளை பயன்படுத்தி 100 சதவீத புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை அடைய வேண்டும். ‘பிஎம் சூா்ய கா்’ திட்டம் தீவுகள் முழுவதும் உள்ள அனைத்து வீடுகளிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தாா்.