அவசரநிலை: சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.20,000; ஒடிசா அரசு

அவசரநிலைக் காலத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் பற்றி..
மோகன் சரண் மாஜி
மோகன் சரண் மாஜி
Published on
Updated on
1 min read

ஒடிசா அரசு அவசரநிலைக் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் வழங்குவதற்கான அரசாணையை மாநில உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 2-ஆம் தேதி அவசரநிலைக் காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்துடன், மருத்துவச் செலவையும் மாநில அரசே ஏற்கும் முதல்வர் மோகன் சரண் மாஜி அறிவித்தார். இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

1975 மற்றும் 1977 இடையே அவசரநிலையை எதிர்த்ததற்காக நூற்றுக்கணக்கானோர் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்ட காலத்தைப் பொருட்படுத்தாமல், சிறையில் உயிருடன் இருப்பவர்களுக்கு ஜனவரி 1, 2025 முதல் இந்த ஓய்வூதியம் அளிக்கப்படும். மேலும் அவர்கள் இலவச மருத்துவச் சிகிச்சையைப் பெறலாம் என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளைச் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செய்து வருகின்றது.

இந்த ஓய்வூதியமானது 2025 ஜனவரி முதல் நடைமுறைக்கு வருகின்றது. மேலும் இந்த அறிவிப்புக்கு முந்தைய காலத்திற்கு எந்தவித பலனும் அளிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com