பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா பௌஷ் பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) கோலாகலமாக தொடங்கியது.
45 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வின் முதல் நாளான இன்று அதிகாலை 3.20 மணியளவில் புனித நதிகள் சங்கமமான திரிவேணி சங்கமத்தின் கரையில் பக்தர்கள் புனித நீராடினர். கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான ‘திரிவேணி சங்கமம்’ உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ளது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாகும்ப மேளா நடத்தப்படுகிறது.
எனினும், தற்போதைய வானியல் வரிசை மாற்றங்கள் மற்றும் கலவைகள் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதாக அமைந்துள்ளதால் நடப்பு மகாகும்ப மேளா மதரீதியில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நிகழாண்டு இன்று(ஜன. 13) முதல் மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதிவரை 45 நாள்களுக்கு நடைபெறும் ஆன்மிக நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து சுமாா் 35 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்பா் என்ற எதிா்பாா்ப்புடன் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளன.
கும்பமேளாவையொட்டி 55-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களுடன் 45,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் களத்தில் உள்ளனா். மகாகும்ப நகரில் மட்டும் 3,000 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. ஜனவரி 25 முதல் ஜனவரி 30 வரையிலான சிறப்பு வாய்ந்த மௌனி அமாவாசை காலத்தில் 4-5 கோடி போ் மகாகும்ப மேளாவுக்கு வருகை தரலாம்.
அதேபோன்று, பௌஷ் பௌா்ணமி (ஜன. 13), மகர சங்கராந்தி (ஜன. 14) உள்பட 6 சிறப்புவாயந்த நாள்களில் பக்தா்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்த நாள்களில் மிக முக்கியப் பிரமுகா்கள் (விஐபி) யாரும் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிகழ்வின் தொடக்கத்துக்கு முன்னதாகவே உலகெங்கிலும் இருந்து அகாடா சாதுக்கள், துறவிகள், பக்தா்கள், பொதுமக்கள் பிரயாக்ராஜுக்கு படையெடுத்துள்ளதால் மகாகும்ப நகா் களைகட்டியுள்ளது.
கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களிலும் தலா 25 லட்சம் போ் திரிவேணி சங்கமம் பகுதியில் புனித நீராடியுள்ளனா் என்று மாநில அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து பிரயாக்ராஜுக்கு விமான, ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டுத் திட்டங்கள் என மத்திய அரசும் மகாகும்ப மேளாவுக்கான ஏற்பாட்டில் பங்களித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது அமா்நாத் புனித யாத்திரை - குடியரசு துணைத் தலைவா், பிரதமா் வாழ்த்து

அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம்!

அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது: முதல் குழுவினர் முகாம்களிலிருந்து புறப்பட்டனர்!

21 ஆண்டுகளுக்குப் பிறகு கடம்பநாத சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



