டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு

இந்திய ரூபாய் மதிப்பு 2 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி!
Published on

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாத வகையில், ஒரே நாளில் மிகக் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

இன்று வணிகம் நிறைவடைந்தபோது, ஒரே நாளில் 57 காசுகள் சரிந்து 86.61 என்ற அளவில் இருந்தது.

அமெரிக்காவின் வலுவான பொருளாதார புள்ளி விவரங்களும், 10 ஆண்டுகால வைப்பு நிதிகளின் ஈவுத்தொகை 5 சதவீதத்தை நெருங்கி வருவதும், அமெரிக்கப் பத்திர விற்பனையை அதிகரித்து வருவதன் எதிரொலியாக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (ஜன. 13) ஒரே நாளில் 57 காசுகள் சரிந்து ரூ.86. 61 காசுகளுக்கு வணிகமானது.

கடைசி வணிக நாளான கடந்த வெள்ளிக்கிழமை ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிந்து, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.86 ஆக முடிந்திருந்தது. இந்த வீழ்ச்சி நிலையே வாரத் தொடக்கமான இன்றைய வணிக நேரத் தொடக்கத்திலும் காணப்பட்டது. வணிகம் தொடங்கியதுபோது, இந்திய ரூபாய் மதிப்பு 86.12 ஆக இருந்து, படிப்படியாக வீழ்ச்சியடைந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பங்குச் சந்தையில் உள்ளூர் முதலீட்டாளர்களிடையே நிலவிய எதிர்மறையான நிலை மற்றும் அந்நிய நிதி முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவை ரூபாய் மதிப்பு சரிந்ததற்கான காரணங்களாகவும் சொல்லப்பட்டன. இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com