
தில்லி மெட்ரோ ரயில்களில் மாணவர்களுக்கு சலுகை அளிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
தில்லி மெட்ரோ ரயில் கட்டணத்தில் மாணவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்க வேண்டும். பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சி இதைத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில்,
கேஜரிவால், தனது கடிதத்தில், தில்லி மெட்ரோவின் பங்குதாரர்களாக இருப்பதால், தள்ளுபடியை மத்திய அரசும் தில்லி அரசாங்கமும் சமமாக ஏற்க வேண்டும்.
ஆம் ஆத்மி அரசு ஏற்கனவே நகரில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்குகிறது. எனவே மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பிற்பகல் 2 மணிக்கு மாநிலப் பிரிவு அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.