
கர்நாடக மாநில பாஜக தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் மத்திய அமைச்சரும் கர்நாடக பாஜகவின் உள்கட்சித் தேர்தல் பொறுப்பாளருமான சிவராஜ் சிங் சௌஹான் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கர்நாடகத்தில் புதிய பாஜக தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
விரைவில் மாநிலத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும். பூத் அளவிலான தலைவர்களுக்கான தேர்தலையும் நடத்துகிறோம்.
சில சமயங்களில் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். தற்போது கர்நாடக மாநில பாஜக தலைவராக விஜயேந்திரா பதவி வகித்து வருகிறார்.
இவர் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவின் மகன் ஆவார்.
இதனிடையே விஜயேந்திராவுக்கு பாஜக தலைவர்களில் ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.