இந்திய வரலாற்றின் முதல் வரைவு காலனித்துவவாதிகளால் திரிக்கப்பட்டது: ஜக்தீப் தன்கர்

இந்திய துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் பேசியவை...
ஜக்தீப் தன்கர்
ஜக்தீப் தன்கர்
Published on
Updated on
1 min read

இந்திய வரலாற்றின் முதல் வரைவு காலனித்துவவாதிகளால் திரித்து எழுதப்பட்டது என இந்திய துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

தில்லியில் பாரதிய வித்யா பவனில் நந்த்லால் நுவால் இந்தியவியல் மையத்தை துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று திறந்துவைத்தார்.

அந்த நிகழ்வில் பேசிய அவர், “நமது நாட்டின் வரலாற்றின் முதல் வரைவு காலனித்துவவாதிகளின் திரிக்கப்பட்ட கண்ணோட்டத்தால் எழுதப்பட்டது. அறிவற்றவர்கள் அவர்களின் குறுகிய மனப்பான்மையால் நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிப்பது பெரிய கேலிக்கூத்து.

காலனித்துவ மனப்பான்மை மற்றும் மரபிலிருந்து நாம் நம்மை விடுவித்துக் கொள்ளவேண்டும்.

ஆயிரக்கணக்கான்னோர் சுதந்திரத்திற்காகப் போராடியபோதும் சிலர் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டனர். சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட இவ்வாறே நடந்தது. இதனால், நமது அறிவுத் தளத்தில் இயல்பான முன்னேற்றம் தடுக்கப்பட்டது.

வேதாந்தம், சமணம், பௌத்தம் மற்றும் பிற தத்துவப் பள்ளிகள் தொடர்ந்து உரையாடல்களையும் மற்றும் சக வாழ்வையும் ஊக்குவித்து வருகின்றன. தனிமைப்படுத்தப்படுகின்ற இன்றைய உலகில் மகத்தான மதிப்பினைப் பேசும் கொள்கைகள் இவை.

இந்தியாவின் பாரம்பரியம் செழித்து வளர்வதை உறுதி செய்வதற்கான நேரம் இது. இதைவிட வேறு சிறந்த நேரம் இருக்க முடியாது. கணிதத்தில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து நமது இளைஞர்கள் பெருமை கொள்ள வேண்டும்.

இன்று நாம் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகளை இந்தியவியல் மூலம் விரைவாகத் தீர்க்க முடியும்” என்று அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com