
தில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு சில நாள்களே உள்ள நிலையில் 4 ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்.
தலைநகரில் பேரவைத் தேர்தல் பிப்.5ல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவி வருகின்றது.
ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் செயல்பாட்டில் உள்ள அதிருப்தியை மேற்கோள் காட்டிய தலைவர்கள், வளர்ச்சியின்மை மற்றும் தவறான நிர்வாகம் ஆகியவை கட்சி மாறுவதற்கான முடிவை மேற்கொண்டதாகக் கூறினார்.
பஜன்புராவைச் சேர்ந்த ஆம் ஆத்மியின் கவுன்சிலர் ஷிப்லா கௌர், தனது பகுதியில் வளர்ச்சி இல்லாததால் பாஜகவில் இணைந்ததாகக் கூறினார்.
பாஜகவில் இணைந்த மற்றொரு முனிசிபல் கவுன்சிலரான ரேகா ராணி, ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாகும் என்றார்.
இதற்கிடையில், கோண்டாவின் முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏவான ஸ்ரீதத் ஷர்மா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்கின் எம்பி பிரதிநிதி சவுத்ரி பிஜேந்தர் பிரதான் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.
மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா, பாஜக எம்பி மனோஜ் திவாரி, பாஜக எம்பி கமல்ஜீத் செராவத் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் இந்த இரு தலைவர்களும் இணையும் விழா நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.