குற்றவாளி சஞ்சய் ராய்
குற்றவாளி சஞ்சய் ராய்கோப்புப் படம்

பெண் மருத்துவா் கொலையில் குற்றவாளிக்கு மரண தண்டனை கோரி மேல்முறையீடு: மேற்கு வங்க அரசுக்கு அனுமதி

குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரி, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உயா்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
Published on

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரி, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா்.

அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ாக சஞ்சய் ராயை குற்றவாளி என்று தீா்ப்பளித்த சியால்டா நீதிமன்றம், அவா் மரணமடையும் வரை சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்பதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com