மன்மோகன் சிங், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா?

மன்மோகன் சிங், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவிருப்பதாக தகவல்...
மன்மோகன் சிங், ரத்தன் டாடா
மன்மோகன் சிங், ரத்தன் டாடா
Published on
Updated on
1 min read

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோரின் பெயர்கள் இந்தாண்டுக்கான பாரத ரத்னா விருதுப் பட்டியலில் முதன்மையாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. நாட்டுக்காகச் சேவையாற்றுபவர்களைப் பாராட்டு விதமாக வழங்கப்படும் இந்த விருது இதுவரை 53 பேர் பெற்றுள்ளனர்.

கலை, அறிவியல், இலக்கியம், கலாசாரம், விளையாட்டு, பொதுச் சேவை உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் 'பாரத ரத்னா' விருது 1954-இல் அறிமுகமானது. வாழ்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று தொடங்கப்பட்ட விருதளிப்பு, 1955-இல் மறைந்தவர்களுக்கும் வழங்க வழிவகை செய்யப்பட்டது.

ஓர் ஆண்டில் அதிகபட்சமாக மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்தாண்டு 5 பேருக்கு வழங்கப்பட்டது.

குடியரசு நாளையொட்டி, ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் பாரத ரத்னா விருது பெறுபவர்களின் பட்டியலை குடியரசுத் தலைவர் வெளியிடுவார்.

இந்த நிலையில், கடந்தாண்டு மறைந்த ரத்தன் டாடா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இந்தாண்டு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

ரத்தன் டாடா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் மறைந்தபோது பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டது. ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.

மேலும், மறைந்த சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், ஹிந்துத்துவ சித்தாந்தவாதி சாவர்க்கர், கல்வியாளர்கள் ஜோதிராவ் புலே மற்றும் சாவித்ரிபாய் புலே, பிகாரின் முதல் முதல்வர் ஸ்ரீ கிருஷ்ணா சிங், ஒடிஸாவின் முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் ஆகியோரின் பெயர்களையும் மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இந்தாண்டு மூன்று அல்லது நான்கு நபர்களின் பெயர்களை பாரத ரத்னா விருதுக்கு மத்திய அரசு பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com