360 எல்லைக் கிராமங்களுக்கு 4ஜி சேவை: அமித் ஷா
நாட்டின் எல்லைப் பகுதிகளையொட்டிய 360 கிராமங்களுக்கு இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 4 ஜி இணைய சேவை வழங்கப்பட உள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சிகள் சாலைகள், ரயில்வே, விமான இணைப்பு போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்பை உருவாக்குவதில் மட்டுமல்லாமல், தலைநகரான தில்லிக்கும் அத்தகைய கிராமங்களுக்கும் இடையிலான தூரத்தைக் குறைக்கும் வகையிலும் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
குடியரசு நாளையொட்டி அணிவகுப்பு நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த எல்லைப்புற கிராமங்களைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், பெண் தொழில்முனைவோர், மாணவர்கள் ஆகியோருடன் அமைச்சர் அமித் ஷா உரையாடினார்.
அப்போது பேசிய அவர், எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள 360 கிராமங்களுக்கு இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 4 ஜி இணைய சேவை வழங்கப்பட உள்ளதாகக் கூறினார்.
எல்லைகளில் உள்ள 662 கிராமங்களில் 474 கிராமங்கள் கம்பி வடம் மூலம் மின் இணைப்பு பெற்றுள்ளதாகவும், 127 கிராமங்கள் கம்பி இணைப்பற்ற மின் இணைப்பை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். கிராமங்களை முன்னேற்றப்பாதைக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த முயற்சிகள் சாலைகள், ரயில்வே மற்றும் விமான இணைப்பு போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்பை உருவாக்குவதில் மட்டுமல்லாமல், அனைத்து வகையிலும் தில்லி போன்ற பெரிய நகரங்களுக்கும் உங்கள் கிராமங்களுக்கும் இடையிலான தூரத்தைக் குறைக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படுகின்றன என அமித் ஷா குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | அரசமைப்பை ஆளுங்கட்சியின் தாக்குதலிலிருந்து காக்க குடியரசு நாளில் உறுதியேற்போம்! -கார்கே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.