
தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து மனு அளித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ரூ. 1,056 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்கக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மனு அளித்துள்ளார்.
கடந்த ஜன. 14 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பின்போது திமுக எம்.பி. கனிமொழி, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.