
இந்தியாவில் காலிஸ்தான் இயக்கத்தையும் மார்க்சியத்தையும் பிரிட்டிஷ் அரசாங்கம்தான் அறிமுகம் செய்தது என்று பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சன்சீவ் சன்யால் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் ’கல்விச் சிந்தனை அரங்கு 2025’ இறுதிநாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (ஜன. 28) காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால், ’வரலாற்றில் கற்றுக் கொண்ட பாடங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
“நான் பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியல் மாணவனாகவே இருந்தேன். தற்போது எழுத்தாளராக மாறியுள்ளேன் என்றால் என் ஆசிரியர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தை சித்தாந்த ரீதியாகப் பிரிக்க பிரிட்டிஷ்தான் இந்தியாவில் காலிஸ்தான் இயக்கம் மற்றும் மார்க்சியம் ஆகிய இரண்டையும் அறிமுகப்படுத்தியது.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பங்காற்றியது உண்மைதான். ஆனால், காந்தியும் நேருவும் மையமாக செயல்பட்டார்கள் என்பது உண்மையல்ல.
சுதந்திர இயக்கத்தின் புனிதத் தலமான தில்லி சிறையை அருங்காட்சியகமாக மாற்றுவதாக நேரு உறுதியளித்த போதிலும், அது இடிக்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது.
பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயல்பட்டவர்கள் அறிவுசார் வர்க்கமாக அறியப்பட்டனர். அவர்களே இந்திய வரலாற்றை எழுதும் பொறுப்புகளில் இருந்தனர்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.