கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் அதிகாரிகள்
கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் அதிகாரிகள்PTI

பிரயாக்ராஜில் நிலைமை கட்டுக்குள் வந்தது: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநிலம் பிராக்ராஜில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் பிராக்ராஜில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்த நிலையில், சிலர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மௌனி அமாவாசையான இன்று (ஜன. 29) திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராட குவிந்ததால் எதிர்பாராத விதமாக அதிகாலை கூட்டநெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்டநெரிசலில் சிக்கி இதுவரை 31 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 200-க்கும் அதிகமான பக்தர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கூட்ட நெரிசல் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுடன் யோகி ஆதித்யநாத் பேசியதாவது,

''இன்று மெளனி அமாவாசை. இதனையொட்டி சுமார் 8 - 10 கோடி பக்தர்கள் மகா கும்பமேளாவிற்கு வந்துள்ளனர். நேற்று 5.5 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இன்று அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் குவிந்ததால் திரிவேணி சங்கமத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தடுப்புகளைத் தாண்டி சிலர் குதிக்க நேர்ந்தபோது பக்தரக்ள் படுகாயம் அடைந்துள்ளனர். மெளனி அமாவாசை தொடங்கியதுமே கூட்டம் வரத் தொடங்கியுள்ளது. இதனால் அதிகாலை 1 மணியளவில் இருந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நிலையைமைக் கண்காணித்து வருகிறார். காலையில் இருந்து 4 முறை தொலைபேசியில் அழைத்துள்ளார். உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, ஆளுநர் அன்னாபென் ஆகியோர் நிலைமை குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தலைமைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர் உள்ளிட்டோருடன் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. அவர்கள் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் உள்ளனர்.

தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், கூட்ட அளவில் மாறுபாடு ஏற்படவில்லை. அகோரிகளிடமும் பேசியுள்ளேன். முதலில் பக்தர்கள் புனித நீராடுவார்கள். அவர்களைத் தொடர்ந்து அகோரிகள் நீராடுவார்கள்'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com