
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு உதவுவதற்காக உத்தரகண்ட் அரசு புதன்கிழமை கட்டணமில்லா எண்களை வெளியிட்டது.
இதுதொடர்பாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,
உத்தரகண்ட் மக்களுக்கு உதவும் வகையில் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டவர்களுக்கு கட்டணமில்லா எண்களை வெளியிட்டுள்ளது.
மாநிலத்திலிருந்து மகா கும்பமேளாவிற்குச் சென்றவர்கள் 1070, 8218867005, 90584 41404 என்ற கட்டணமில்லா எண்களை அழைப்பதன் மூலம் அனைத்து வகையான உதவிகளையும் பெறலாம் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேம், பிரயாக்ராஜில் நடந்துவரும் மகா கும்பமேளாவில் மிகவும் மங்களகரமான மௌனி அமாவாசை(தை அமாவாசை) புனித நீராடல் இன்று நடைபெறுவதையொட்டி நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வந்துள்ளனர்.
புதன்கிழமை அதிகாலை மகா கும்பமேளாவின் சங்கமப் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி இதுவரை 31பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.