ஜிபிஎஸ் நோய்க்கு 2-வது பலி: 127 உயர்ந்த பாதிப்பு!

மகாராஷ்டிரத்தைத் தாக்கும் ஜிபிஎஸ் நோய் பற்றி..
ஜிபிஎஸ் நோய்
ஜிபிஎஸ் நோய்
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலத்தில் ஜிபிஎஸ் நோய்க்கு இரண்டாவது நபர் பலியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புணேவில் சமீபத்தில் ஜிபிஎஸ் என அழைக்கப்படும் கிலான் பாரே சிண்ட்ரோம் நோய்த் தொற்று பரவி வருகின்றது. மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் தவறுதலாக உடலின் ஆராக்கியமான செல்களை தாக்குவதால் இந்த நோய் ஆட்டோ இம்யூன் என அழைக்கப்படுகிறது. இந்த நோயின் ஒருவகை தான் ஜிபிஎஸ் ஆகும். இந்த நோயானது தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் சோலாப்பூரில் ஒருவர் ஜிபிஎஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், புணேவின் சின்ஹாகாட் சாலையைச் சேர்ந்த 56 வயது பெண் இந்த நோய்க்கு பலியாகியுள்ளார். ஜிபிஎஸ் நோய்க்கு பலியான இரண்டாவது நபர் இவராவார். இதையடுத்து ஜிபிஎஸ் நோய்க்கு பாதிக்கப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட 40 வயது நபருக்கு திடீரென மூச்சுத்திணறல், கீழ் மூட்டுகளில் வலி, உடல் சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சோலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவரின் மாதிரிகள் புணேவில் உள்ள தேசிய தொற்று நோய் நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com