நடிகையாக அறிமுகமாகும் கும்பமேளாவைக் கலக்கிய அழகு நட்சத்திரம் மோனலிசா!

நடிகையாக அறிமுகமாகும் கும்பமேளா அழகி மோனிஷா போஸ்லே..
நடிகையாக அறிமுகமாகும் கும்பமேளாவைக் கலக்கிய அழகு நட்சத்திரம் மோனலிசா!
Published on
Updated on
2 min read

கும்பமேளாவில் பிரபலமான அழகியான மோனிஷா போஸ்லே புதிய படமொன்றில் நடிகையாக அறிமுகமாக இருப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உலகின் மிகப் பெரிய ஆன்மிகத் திருவிழா என்று அறியப்படும் மகா கும்பமேளா நடைபெற்றது. பல்வேறு ஆன்மிகச் சிறப்புகளால் இந்த மகா கும்பமேளா மிகவும் முக்கியத்துவம் பெற்றது.

இந்த நாள்களில் கோடிக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜ் வந்து கங்கையில் புனித நீராடிச் செல்வது வழக்கம். சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சாதுக்களும் இங்கு வந்து புனித நீராடுவது வழக்கம்.

இந்த நிலையில் நர்மதா நதிக்கரையில் உள்ள கிலா காட் பகுதியில் பல ஆண்டுகளாக பூக்கள் மற்றும் மாலைகளை விற்று வந்தாலும், ருத்ராட்ச மாலைகளை விற்பதை இன்ஸ்டா பிரபலம் ஒருவர் தன்னுடய பக்கத்தில் பகிர்ந்தபோது மிகவும் புகழ் பெற்றார் மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியான மோனலிசா போஸ்லே.

இதையும் படிக்க | மகா கும்பமேளாவைக் கலக்கிய அழகு நட்சத்திரம்! யார் இந்த மோனலிசா!

தேசிய தொலைக்காட்சி முதல் சமூக ஊடகங்கள் வரை பட்டித்தொட்டியெங்கும் பிரபலமான மோனலிசா போஸ்லே மீண்டும் முக்கியச் செய்தி ஒன்றில் இடம்பிடித்துள்ளார்.

அழகிய கண்களுக்கு சொந்தக்காரராகவும் மிகவும் அழகானப் பெண்ணாகவும் பார்க்கப்பட்ட மோனலிசா, மிக விரைவில் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் கூறிவந்தனர்.

அதுபோலவே மோனலிசா 'தி டைரி ஆஃப் மணிப்பூர்' என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக படத்தின் எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான சனோஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இவர் இதற்கு முன்னதாக ‘தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். மோனலிசாவைச் சந்தித்து அவருடனான படங்களை இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மோனலிசா போஸ்லே கார்கோன் மாவட்டத்தின் மகேஷ்வரில் வசித்து வருகிறார். அவர் நடிக்கவிருக்கும் படமான தி டைரி ஆஃப் மணிப்பூரின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா சமீபத்தில் மோனலிசா மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து தனது வரவிருக்கும் படமான தி டைரி ஆஃப் மணிப்பூர் பற்றி விவாதித்தார். அவர்களின் உரையாடல் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | யமுனையை நீர்நிலையாக பார்க்காமல் உயிராகப் பார்க்க வேண்டும்! -ராகுல் காந்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.