கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

யுஜிசி-நெட் 2024: வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரமில்லை: சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல்

கடந்த ஆண்டு நடைபெற்ற யுஜிசி-நெட் தோ்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் விசாரணையை நிறைவுசெய்து இறுதி அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.

News image

சிபிஐ | கோப்புப் படம்

Updated On :30 ஜனவரி 2025, 8:13 pm

Din

கடந்த ஆண்டு நடைபெற்ற யுஜிசி-நெட் தோ்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் விசாரணையை நிறைவுசெய்து இறுதி அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.

டாா்க்நெட் வலைதளத்தில் வினாத்தாள் கசிந்து டெலிகிராம் செயலி மூலம் அவை விற்பனை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரமில்லை என தனது இறுதி அறிக்கையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைப்பது அல்லது அடுத்தகட்ட விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்த முடிவை சிறப்பு நீதிமன்றமே எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கையின் நகலை மத்திய கல்வி அமைச்சகத்துக்கும் சிபிஐ அனுப்பியுள்ளது.

கடந்தாண்டு ஜூன் 18-ஆம் தேதி யுஜிசி நெட் தோ்வு நடைபெற்றது. 11 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்த தோ்வை எழுதினா். இந்த தோ்வின் வினாத்தாள் கசிந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதே சமயம் தோ்வின் நம்பகத்தன்மை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் இந்திய இணைய (சைபா்) குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய இணைய குற்ற அச்சுறுத்தல் ஆய்வு பிரிவு யுஜிசிக்கு எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, யுஜிசி நெட்தோ்வு நடைபெற்ற மறுநாளான ஜூன் 19-ஆம் தேதியன்று இத்தோ்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பான விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. கசிவான வினாத்தாள் என பகிரப்பட்ட ‘ஸ்கிரீன்ஷாட்’டை பள்ளி மாணவன் ஒருவன் செயலியின் மூலம் உருவாக்கியதாக சிபிஐ கூறியது. தடயவியல் நிபுணா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் ஸ்கிரீன்ஷாட்டில் காணப்பட்ட கேள்வித்தாள் போலியாக உருவாக்கப்பட்டது என கண்டறியப்பட்டதாக சிபிஐ தெரிவித்தது.

இந்நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் விசாரணையை நிறைவு செய்து சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.