குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆணையருக்கு அடி, உதை..! தரதரவென வெளியே இழுத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு!

குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆணையர் தாக்கப்பட்டதால் பரபரப்பு...
குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆணையர் தாக்கப்பட்டு, வெளியே இழுத்துச் செல்லப்பட்ட போது...
குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆணையர் தாக்கப்பட்டு, வெளியே இழுத்துச் செல்லப்பட்ட போது...படம் | எக்ஸ் விடியோவிலிருந்து...
Published on
Updated on
1 min read

ஒடிசாவில் நடந்த குறைதீர் கூட்டத்தில், மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நேற்று(ஜூன் 30) குறைதீர் கூட்டத்தின்போது, திடீரென அலுவலகத்துக்குள் புகுந்த இளைஞர்கள் சிலர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் ரத்னாகர் சாஹூ மீது சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டனர்.

மேலும், அவரை அடித்து, உதைத்து தர, தரவென அலுவலகத்துக்கு வெளியே இழுத்துச் சென்றனர். இதை ஒருவர் விடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த விடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த விடியோவில், ரத்னாகர் சாஹூவை இளைஞர்கள் சிலர் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அடையாளம் தெரியாத இளைஞர்கள் அந்த அதிகாரியின் சட்டையின் காலரைப் பிடித்து அலுவலகத்திற்கு வெளியே இழுத்துச் சென்றனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, 6 இளைஞர்கள் ரத்னாகர் சாஹூவின் அறைக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளர். இதனால், ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தாக்குதலுக்கான சரியாக காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மேலும், தாக்குதல் நடத்தியவர்களின் விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ஊழியர்கள் அலுவலக வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை கவனத்தில் கொண்டு, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவருடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த வீடியோவைப் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தற்போதைய முதல்வர் மோகன் சரண் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளது.

ஒரு மூத்த அதிகாரிக்கே தனது அலுவலகத்திலேயே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண குடிமக்கள் அரசிடமிருந்து என்ன சட்டம் ஒழுங்கை எதிர்பார்க்கிறார்கள்?” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

Punches, kicks, slaps, and abuses were all rained on the Additional Commissioner of the Bhubaneswar Municipal Corporation (BMC), Ratnakar Sahoo, who was assaulted by a group of young men inside the civic body office while conducting a public grievance redressal meeting on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com