ம.பி. பாஜக தலைவராக ஹேமந்த் குமார் தேர்வு!

கண்டேல்வாலின் தலைமையில் பாஜகவின் புதிய அத்தியாயம்..
Madhya Pradesh BJP president
ஹேமந்த் குமார் கண்டேல்வால்
Published on
Updated on
1 min read

மத்தியப் பிரதேச பாஜக பிரிவின் புதிய தலைவராக எம்எல்ஏ ஹேமந்த் குமார் கண்டேல்வால் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

பாஜக மத்தியப் பிரதேச பிரிவுத் தலைவர் பதவிக்கு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த ஒரே வேட்பாளர் கண்டேவால் ஆவார். பெதுல் எம்எல்ஏ கண்டேவாலை புதிய மாநில பாஜக தலைவராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், கஜுராஹோ எம்.பி.யும், மாநில பாஜக தலைவருமான விஷ்ணு தத் சர்மா, மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சௌகான், வீரேந்திர குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2020 முதல் மாநிலத்தில் சர்மா உயர் நிறுவனப் பதவியை வகித்தவர். செவ்வாய்க்கிழமை கண்டேல்வாலின் முன்மொழிபவராக இருந்த முதல்வர் மோகன் யாதவ், மாநில பாஜக அலுவலகத்தில் வேட்புமனுவைச் சமர்ப்பித்தார்.

ஹேமந்த் கண்டேல்வாலின் தந்தை விஜய் குமார் கண்டேல்வால், பெதுல் தொகுதியிலிருந்து நான்கு முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர்.

2007 ஆம் ஆண்டு தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, ஹேமந்த் கண்டேல்வால், பெதுல் தொகுதியிலிருந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதல் முறையாக மக்களவையில் நுழைந்தார்.

2010 முதல் 2013 வரை பாஜகவின் பெதுல் மாவட்டத் தலைவராகவும், 2013 முதல் 2018 வரை பெதுல் தொகுதியின் எம்எல்ஏவாகவும் பணியாற்றினார். 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் ஹேமந்த் கண்டேல்வால் மீண்டும் அந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் மாநில பாஜகவின் பொருளாளராகவும் பணியாற்றினார், மேலும் தற்போது குஷாபாவ் தாக்கரே அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார்.

summary

Legislator Hemant Kumar Khandelwal was on Wednesday declared elected as the new president of the Madhya Pradesh BJP unit in the presence of senior party leaders.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com