இந்திய இளைஞருக்கு ரூ.853 கோடி சம்பளத்தில் மெட்டா நிறுவன வேலை!

ஐஐடி கான்பூரில் பட்டம் பெற்ற இந்தியர் திரபித் பன்சாலுக்கு மெட்டா நிறுவனத்தில் ரூ.850 கோடி சம்பளத்துடன் வேலை
இந்திய இளைஞருக்கு ரூ.853 கோடி சம்பளத்தில் மெட்டா நிறுவன வேலை!
Published on
Updated on
1 min read

ஐஐடி கான்பூரில் பட்டம் பெற்ற இந்தியர் திரபித் பன்சாலுக்கு மெட்டா நிறுவனத்தில் ரூ.850 கோடி சம்பளத்துடன் வேலை கிடைக்கப் பெற்றுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் செய்யறிவுப் பிரிவில் பணிபுரிய இந்திய வம்சாவளியான திரபித் பன்சால் தேர்வாகியுள்ளார். மெட்டாவின் அறிவிப்பின்படி, இவருக்கு ஆண்டுக்கு 100 மில்லியன் டாலர் (ரூ.853.3 கோடி) சம்பளம் வழங்கப்படலாம்.

ஐஐடி கான்பூரில் இரட்டைப் பட்டம் பெற்ற இவர், ஓபன்ஏஐ நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் கணிதம், புள்ளியியல், கணினி அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார். இந்திய அறிவியல் நிறுவனம், முகநூல், கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.

மேலும், பட்டப் படிப்பின்போதே, 2017 ஆம் ஆண்டிலேயே ஓபன்ஏஐ-யில் பயிற்சி பெற்றார். தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டிலேயே ஓபன்ஏஐ-யிலேயே பணிபுரியத் தொடங்கினார்.

மெட்டா நிறுவனத்தில் செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) பிரிவை வலுப்படுத்தும் முயற்சியில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. உலகளவிலான பெரிய நிறுவனங்களில் மனிதர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, செய்யறிவின் உதவியை நாடி வருகின்றனர். அந்த வகையில், மெட்டா நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது.

ஆனால், தற்போது செய்யறிவுப் பிரிவில் சிறந்து விளங்குபவர்களை, தனது நிறுவனத்தில் பணிபுரிய மெட்டா அழைப்பு விடுத்திருந்தது. மெட்டா நிறுவனத்தின் புதிய சூப்பர் இன்டெலிஜென்ஸ் (Superintelligence) ஆய்வகத்துக்கு ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்முனைவோரைச் சேர்க்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

மெட்டாவில் பணிபுரிய ஓபன்ஏஐ நிறுவன ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட ஓபன்ஏஐ நிறுவனம் தெரிவித்ததுடன், அழைப்பினை ஊழியர்கள் மறுத்து விட்டதாக தெரிவித்திருந்தது.

Summary

$100 Million To Quit OpenAI For Meta? All About IIT Alum Trapit Bansal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com