அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானார் சத்யேந்தர் ஜெயின்!

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சத்யேந்தர் ஜெயினுக்கு விசாரணை..
Satyendar Jain
சத்யேந்தர் ஜெயின்
Published on
Updated on
1 min read

தில்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை விரிவுபடுத்துவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் பண மோசடி வழக்கில் விசாரணைக்காகத் தில்லி முன்னாள் அமைச்சரும், ஆத் ஆத்மி தலைவருமான சத்யேந்தர் ஜெயின் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

60 வயதான சந்யேந்தர் ஜெயின் காலை 11.15 மணியளவில் அமலாக்கத் துறை விசாரணை அமைப்பின் அலுவலகத்திற்கு வந்தார். மேலும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தில்லி நீர் வாரியத்தின் கீழ் சில கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை விரிவுபடுத்துவதில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அவரிடம் நடத்தப்படுகிறது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அமலாக்கத் துறை விசாரணையை நடத்தத் தொடங்கியது.

தில்லி ஊழல் தடுப்புப் பிரிவு யூரோடெக் சுற்றுச்சூழல் தனியார் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு எதிராகத் தாக்கல் செய்த முதல் அறிக்கையிலிருந்து பணமோசடி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், பாப்பன்கலா, நிலோதி, நஜாப்கர், கேஷோபூர், கொரோனேஷன் பில்லர், நரேலா, ரோஹினி மற்றும் கோண்ட்லி ஆகிய இடங்களில் உள்ள 10 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் என்ற பெயரில் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததன்பேரில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

Summary

Former Delhi minister and AAP leader Satyendar Jain appeared before the Enforcement Directorate on Thursday for questioning in a money laundering case linked to alleged corruption in the augmentation of some sewage treatment plants by the Delhi Jal Board (DJB), official sources said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com