அமர்நாத் யாத்திரை தொடக்கம்: புறப்பட்டது 2வது குழு!

அமர்நாத் யாத்திரையில் 5,200 பக்தர்கள் கொண்ட குழு பாதுகாப்புடன் புறப்பட்டது.
Amarnath yatra
அமர்நாத் யாத்திரைPTI
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே அமர்நாத் யாத்திரை கோலகலமாக இன்று(ஜூலை 3) முதல் தொடங்கியுள்ளது.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி, ஜம்மு முகாமிலிருந்து காஷ்மீரில் உள்ள இரு அடிவார முகாம்களுக்கும் ஏற்கெனவே 5,892 பேர் அடங்கிய முதல் குழு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றது. இக்குழுவினரின் பயணத்தை துணைநிலை ஆளுநரும், ஸ்ரீஅமா்நாத் கோயில் வாரியத் தலைவருமான மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்த நிலையில், இன்று 5,200-க்கும் மேற்பட்ட பக்தர்களின் இரண்டாம் குழு ஜம்முவிலிருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமர்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பாதுகாப்பு போலீஸார் மற்றும் மத்திய துணை ராணுவப் படைகளின் பாதுகாப்பில் 168 வாகனங்கள் கொண்ட குதிரைப்படையில் பக்தர்கள் பகவதி நகர் அடிப்படை முகாமிலிருந்து புறப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுவரை ஜம்மு அடிப்படை முகாமிலிருந்து சன்னதிக்குச் சென்ற பக்தர்களின் எண்ணிக்கை 11,138ஐ எட்டியுள்ளது. இரண்டாவது குழுவில் 4,074 ஆண்கள், 786 பெண்கள் மற்றும் 19 குழந்தைகள் அடங்குவர்.

ஏப்ரல் 22 அன்று பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட போதிலும், நாங்கள் பயந்து ஓடவில்லை என்று சன்னதிக்குச் செல்லும் பக்தர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

இதுவரை, அமர்நாத் யாத்திரைக்கு 3.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Amid tight security, the second batch of more than 5,200 pilgrims left the base camp here on Thursday for the Amarnath cave shrine in South Kashmir Himalayas, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com