பிரதமர் மோடி பெறும் மரியாதை அனைத்தும் இந்தியாவுக்கே: காங்கிரஸ்
பிரதமர் நரேந்திர மோடிக்கு மற்ற நாடுகள் வழங்கும் மரியாதை அனைத்தும் இந்தியாவுக்கானது என்று காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறியுள்ளார்.
டிரினிடாட்-டொபேகோ குடியரசு நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், அவரின் சுற்றுப்பயணத்தைச் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரத் துறையின் தலைவர் பவன் கேரா, பிரதமருக்கு கிடைக்கும் கௌரவங்கள் அனைத்தும் இந்தியாவுக்குத்தான் என்று கூறினார்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நமது பிரதமர்கள் எந்தெந்த நாடுகளுக்கு சென்றனர், எந்த நாடுகளுக்குச் செல்லவில்லை என்ற பட்டியலை பிரதமர் மோடி உருவாக்கினார். பின்னர், அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு, அவரின் பயணப் பட்டியலை உருவாக்கினார்.
கடந்த 50 நாடுகளில் வேறு எந்த பிரதமரும் செல்லாத நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் செய்துள்ளார். அவர் செல்லும் இடங்களில் அவருக்கு மரியாதையும் கிடைக்கிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு நல்ல மதிப்பு கிடைக்கிறது.
இந்தியா, கடந்த 70 - 75 ஆண்டுகளில் அனைவருடனும் நல்ல உறவை மேம்படுத்தி வருகிறது. இதன் காரணமாகவும், நமது பிரதமருக்கு இன்று கௌரவங்களைப் பெற்று வருகிறார். ஆகையால், அவர் பெறும் அனைத்து கௌரவங்களும் இந்தியாவுக்கானதே என்று தெரிவித்தார்.