கியூட்-யுஜி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

மத்திய பல்கலைக்கழகங்களுக்கான கியூட்-யுஜி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
கியூட் தேர்வு முடிவுகள்
கியூட் தேர்வு முடிவுகள்Center-Center-Delhi
Published on
Updated on
1 min read

நடப்பு ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (கியூட்-யுஜி) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான கியூட்-யுஜி தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தியிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில், தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

cuet.nta.nic.in என்ற இணையதள முகவரியில், தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்தே, பொதுப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்க முடியும். இது குறித்து தேசிய தேர்வு முகமை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கியூட்-யூஜி நுழைவுத் தேர்வுக்கான விடைக் குறிப்புகள் ஜூலை 1ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவா்களை சோ்க்க பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வை (கியூட்) மத்திய அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.

Summary

The results of the current year's Common University Entrance Examination (CUTE-UG) for undergraduate courses have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com