ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அமலாக்கத்துறை சோதனையால் ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சருக்கு சிக்கல்..
ED raids
அமலாக்கத்துறை சோதனை
Published on
Updated on
1 min read

ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது.

முன்னால் அமைச்சர் யோகேந்திர சாவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடந்துவரும் சட்டவிரோத மணல் சுங்கம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக ஹசாரிபாக் மற்றும் ராஞ்சி உள்பட எட்டு இடங்களில் அமலாத்துறை சோதனை நடத்தியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மிரட்டி பணம் பறித்தல், சட்டவிரோத மணல் சுரங்கம் மற்றும் நில அபகரிப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் வருமானம் ஈட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடந்துவரும் விசாரணையுடன் இந்த சோதனைகள் தொடர்புடையவையாகும்.

சாவ் ஒரு காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநிலத்தின் முன்னாள் விவசாய அமைச்சர். அவரது எம்.எல்.ஏ மகள் அம்பா பிரசாத் மீது விசாரிக்கப்பட்ட பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The Enforcement Directorate on Friday raided multiple locations in Jharkhand as part of an ongoing alleged illegal sand mining and extortion linked money laundering investigation against former minister Yogendra Sao and his family members, official sources said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com