ஜம்மு-காஷ்மீருக்குப் பயமின்றி வருகை தாருங்கள்.. மத்திய அமைச்சர் வேண்டுகோள்!

ஜம்மு-காஷ்மீரை பயமின்றி அனைவரும் பார்வையிடலாம் மத்திய அமைச்சர்..
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரை பயமின்றி அனைவரும் வந்து பார்வையிடுமாறு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழாவின்போது விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஜம்மு-காஷ்ரில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் முதல் ஓமர் அப்துல்லா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது மத்திய அமைச்சர் பேசுகையில்,

ஜம்மு-காஷ்மீரைப் பயமின்றி பார்வையிடுமாறு பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். இங்குள்ள மக்கள் தங்கள் அன்பான இதயங்களுடன் வரவேற்கக் காத்திருக்கிறார்கள். எனவே, பயமின்றி இங்கு வந்து அன்பு மற்றும் சகோதரத்துவத்திற்கு ஒரு புதிய முன்மாதிரியாக இருங்கள்.

ஏப்ரல் மாதத்தில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இதனடிப்படையில் பஹல்காம் சுற்றுலாத் தலத்திற்கு வருவோர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

ஸ்ரீநகரில் வருகை தந்திருந்த அவர், காற்றின் அமைதி, மண்ணின் வாசனை, இயற்கை அழகு, மக்கள் காட்டிய அன்பு என் இதயத்தை வென்றுள்ளது.

இது உண்மையிலேயே இந்தியாவின் ரத்தின கிரீடம் மற்றும் பூமியின் சொர்க்கம் என்று அவர் கூறினார். மேலும் தால் ஏரிக்குச் சென்று அங்குக் குதிரை சவாரியும் செய்தார். அங்குள்ளவர்கள் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து இங்கு வரச்சொல்லுங்கள் என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசியதாக அவர் கூறினார்.

முதல்வர் ஓமர் அப்துல்லாவுடன் சந்திப்புகளை நடத்தியதாகவும், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு முயற்சிகள் குறித்து அவருடன் விவாதித்ததாகவும் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரை தோட்டக்கலை மைய்யமாக மாற்ற மத்திய அரசு பாடுபடுவதாகவும், அதற்காக ஆப்பிள், பாதாம் மற்றும் வால்நட் ஆகியவற்றிற்கான ரூ. 150 கோடி தாவர மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

விவசாயிகளுக்கு நல்ல தரமான, நோயற்ற தாவரங்கள் தேவை அதை அந்த மையம் வழங்கும். தனியார் செடி விற்பனை நிலையம் அமைப்பவர்களுக்கு மானியம் வழங்கப்படும்.

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் பேரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, சரிபார்ப்புக்குப் பிறகு அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும்.

முன்னதாக, மாணவர்களிடம் உரையாற்றிய அவர், மாநில பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் நாம் ஐந்தாவது இடத்தில் உள்ளோம், விரைவில் முதலிடத்தை அடைவோம் என்று நம்புகிறேன் என்றார்.

காஷ்மீரின் ஆப்பிள் உலகின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதைப் பார்க்க விரும்புவதாகவும், இந்தியாவை உலகின் உணவுப் பெட்டியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Summary

Union Minister Shivraj Singh Chouhan on Friday appealed to the general public to visit Jammu and Kashmir, the region recently hit by several terror killings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com