ஜம்மு-காஷ்மீரில் ஐந்து பேருந்துகள் மோதியதில் 36 அமர்நாத் பக்தர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீரில் ஐந்து பேருந்துகள் மோதியதில் 36 அமர்நாத் பக்தர்கள் காயமடைந்தனர்.
five buses collide in J-K's Ramban
விபத்தில் சிக்கிய பேருந்துகள். Photo | Screengrab from X, @PTI_News
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் ஐந்து பேருந்துகள் மோதியதில் 36 அமர்நாத் பக்தர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் ராம்பனில் உள்ள சந்தர்கோட் லங்கர் தளத்திற்கு அருகே அமர்நாத் யாத்திரைக்கு சனிக்கிழமை சென்றுகொண்டிருந்த வாகனங்களில் கடைசி வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நான்கு வாகனங்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த உடனேயே, சிவில் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்களில் ராம்பன் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

"மொத்தம் 36 காயமடைந்த நோயாளிகள் எங்களிடம் வந்தனர். அவர்கள் அனைவருக்கும் சிறிய காயங்கள் உள்ளன. மேலும் அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன," என்று ராம்பன் மாவட்ட மருத்துவமனையின் பொறுப்பாளர் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் முகமது ரஃபி கூறினார்.

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் 10 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்றும் மீதமுள்ளவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

விபத்தில் வாகனங்கள் சேதமடைந்ததால், தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக்கு பக்தர்கள் தங்கள் பயணத்தைத் தொடர நிர்வாகம் மாற்று வாகனங்களை வழங்கியுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

விபத்தில் சிறிய காயங்களுக்கு ஆளான பக்தர்கள் அமர்நாத் குகைக்கு தங்கள் பயணத்தைத் தொடர நிர்வாகம் வாகனங்களையும் வழங்கி வருகிறது என்றார்.

ஜூலை 15-ல் உங்களுடன் முதல்வர் திட்டம்! மகளிர் உரிமைத் தொகைக்கும் விண்ணப்பிக்கலாம்!

Summary

At least 36 Amarnath pilgrims were injured after five yatra vehicles collided near the Chanderkote area in Ramban on the Srinagar-Jammu highway on Saturday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com