பிகாரை குற்றத் தலைநகராக மாற்ற ஜேடியு-பாஜக முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

பிகாரில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நிகழ்ந்துள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு..
Mallikarjun Kharge
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே PTI
Published on
Updated on
1 min read

பிகாரை நாட்டின் "குற்றத் தலைநகராக" மாற்ற ஜேடியு-பாஜக கூட்டணி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

பிகாரில் இரட்டை இயந்திர அரசு சட்டம் ஒழுங்கு நிலைமையை அழித்துவிட்டது. கடந்த ஆறு மாதங்களில், 8 தொழிலதிபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 முறை போலீஸார் தாக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும், மூடநம்பிக்கை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர். பிகாரின் பூர்னியா மாவட்டத்தில் சூனியம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜேடியு-பாஜக கூட்டணி பிகாரை நாட்டின் குற்றத் தலைநகராக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. பிகாரில் வறுமை உச்சத்தில் உள்ளது. சமூக மற்றும் பொருளாதார நீதியில் நிலைமை மோசமாகிவிட்டது. சட்டம் ஒழுங்கு தேக்கமடைந்துள்ளதால், முதலீடு வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது.

இந்த முறை பிகார் பின்தங்காது, மாற்றம் நிச்சயம். இந்தியா கூட்டணி இந்த மாற்றத்தைக் கொண்டுவரும் என்று அவர் கூறினார்.

கடந்த வாரம் பாட்னாவில் உள்ள பிரபல தொழிலதிபர் கோபால் கெம்கா தனது இல்லத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, எதிர்க்கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் கடுமையாகத் தாக்கி வருகின்றன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், பாஜகவும் முதல்வர் நிதிஷ் குமாரும் இணைந்து பிகாரை "இந்தியாவின் குற்றத் தலைநகராக" மாற்றியுள்ளனர் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.

வரவிருக்கும் பேரவைத் தேர்தலில், அரசை மாற்றுவதற்கு மட்டுமல்ல, மாநிலத்தைக் காப்பாற்றுவதற்கும் என்று ராகுல் வலியுறுத்தினார்.

ஹாஜிபூரில் தனது மகனை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, பாட்னாவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே இருசக்கர வாகனத்தில் வந்தவரால் கெம்கா சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Congress leader Mallikarjun Kharge accused the JDU-BJP alliance of making every effort to turn Bihar into the "crime capital" of the country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com