
புது தில்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமுறை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்தியாவில், ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில், இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிரான மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்தியாவில், ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை விவகாரத்தில் உள்துறை அமைச்சகம்தான் முடிவெடுக்க முடியும் என்றும் ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதைக் கேட்ட உச்ச நீதிமன்றம், ஆதார் அட்டையை ஏற்க முடியாது என ஏன் குறுகிய காலத்தில் முடிவெடுக்கப்பட்டது. முன்னரே இந்த நடவடிக்கையை தொடங்கியிருக்கலாமே? என தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டது.
மேலும், தேர்தல் நடைமுறைகளில் இருந்து தனியாக செய்யாமல், அதோடு ஏன் குழப்ப வேண்டும்? என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்சிறப்பு திருத்த முறை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இதற்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று கூறிய நிலையில், இந்த அவசியமான பயிற்சியை ஏன் தேர்தலோடு குழப்ப வேண்டும் என்று கேட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
மேலும், பிகார் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் சிறப்பு திருத்தம் சரியானதுதான் என்றும், இதற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் உரிமை பெற்றவர், இந்தியக் குடிமகனா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்தானே? அதற்காக மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முறை நியாயமானதே என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துக் கூறியிருக்கிறது.
இதையடுத்து, ஒருவர் இந்திய குடிமகனா இல்லையா? என்பதை உறுதி செய்ய வேண்டியது மத்திய அரசுதானே தவிர, தேர்தல் ஆணையம் அல்ல என்று மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதத்தை முன்வைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.