
தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் ரூ. 2 ஆயிரம் கடன் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 23 வயது நபர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், ஃபர்தீன் என்பவரிடமிருந்து ஆதில் ரூ. 2 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். நேற்று ஃபர்தீன், ஜாவேத் ஆகியோர் ஆதிலிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, ஆதில் கோபமடைந்து அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்தத் தாக்குதலில் ஃபர்தீன் பலத்த காயமடைந்தார். காயமடைந்தவரை அவரது தந்தையால் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறினார். இதையடுத்து காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தார்.
கத்திக் குத்து சம்பவம் நிகழும்போது ஆதிலின் சகோதரர் கமில் மற்றும் அவரது தந்தை ஷகீல் ஆகியோரும் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், தாக்குதல் நடத்தத் தூண்டியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
ஆதிலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆதிலை பிடிக்கவும், குற்றத்திற்கான ஆயுதத்தை மீட்கவும் முயற்சிகள் நடந்து வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: ஓரணியில் தமிழ்நாடு: வீடுவீடாக முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.