
அதானிதான் நரேந்திர மோடியை இயக்குகிறார் என ஒடிசாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
"ஒடிசா, சத்தீஸ்கரில் ஒலிக்கும் ஒரே பெயர் அதானிதான். ஒடிசாவைப் பொருத்தவரை அதானிதான் ஒடிசா அரசை இயக்குகிறார். அதானிதான் நரேந்திர மோடியையே இயக்குகிறார். புரி ஜெகந்நாதா் ரத யாத்திரையில் பல லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அன்று யாத்திரை நடைபெறும்போது அதானி மற்றும் அவரது குடும்பத்திற்காக தேர் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாகவே ஒடிசா அரசு எப்படி செயல்படுகிறது என்று தெரிந்துகொள்ளலாம். அதானி போன்ற 5- 6 பணக்காரர்களுக்காக இயங்கும் அரசு இந்த அரசு. உங்களுடைய நிலங்களை, காடுகளை மற்றும் எதிர்காலத்தைத் திருடுவதே அவர்களின் இலக்கு.
நான் ஒன்று கேட்கிறேன், இந்த அரசு எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது? பெரிய பெரிய நிறுவனங்கள் வருகின்றன. ஆனால் உங்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
அவர்களின் உங்களின் நிலங்களை, பணத்தை, இயற்கை வளங்களை எடுத்துக்கொள்கிறார்கள்.
உங்களின் சிறு வியாபாரங்களை முதலில் அழித்து உங்களுடைய நிலங்களை, தண்ணீரை, காடுகளை எல்லாம் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஏழை மக்களிடம் இருந்து அனைத்தையும் திருடுவதே ஒடிசா பாஜக அரசின் ஒரே வேலை. முன்னதாக பிஜேடி அரசு இதைச் செய்தது. இப்போது பாஜக அரசு இதனைச் செய்கிறது.
ஒருபுறம் ஒடிசாவின் ஏழை மக்கள். தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்கள். மறுபுறம் 5- 6 பணக்காரர்களும் பாஜக அரசும்.
ஒடிசா மக்களுடன் இணைந்து வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். அதை யாராலும் தடுக்க முடியாது" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.