மியான்மர் எல்லையில் இந்தியா ட்ரோன் தாக்குதல்?

மியான்மர் எல்லையில் உள்ள உல்ஃபா(I) முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ட்ரோன் (கோப்புப்படம்)
ட்ரோன் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

மியான்மர் எல்லையில் உள்ள உல்ஃபா(I) முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து உல்ஃபா(I) அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், பல நடமாடும் முகாம்களில் அதிகாலையில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தடைசெய்யப்பட்ட அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் தாக்குதல்களில் கொல்லப்பட்டார்.

மேலும் சுமார் 19 பேர் காயமடைந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற சம்பவம் நடந்ததாக எந்தத் தகவலும் இல்லை என்று இந்திய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் பிடிஐயிடம் தெரிவித்தார்.

கழிப்பறையில் புகைப்பிடித்த இளம் ஜோடியால் 17 மணி நேரம் தாமதமான விமானம்!

இந்திய ராணுவத்திடம் இதுபோன்ற நடவடிக்கை குறித்து எந்த தகவலும் இல்லை என்று லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் கூறினார். கடந்த 35 ஆண்டுகளாக தடைசெய்யப்பட்ட அமைப்பான அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா), மியான்மரை தளமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

Summary

The proscribed ULFA(I) on Sunday claimed drone attacks on its camps along the Myanmar border by the Indian Army, though there was no confirmation about the development from the armed forces.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com