யேமனில் மரண தண்டனை: செவிலியர் நிமிஷாவை காப்பாற்ற குடும்பத்தாரின் கடைசி முயற்சி!

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியரைக் காப்பாற்ற பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.8.60 கோடி குருதிப் பணம் தர செவிலியர் நிமிஷா குடும்பத்தினர் முயற்றி மேற்கொண்டுள்ளனர்.
 'Blood Money' Save Indian Nurse Nimisha Priya?
செவிலியர் நிமிஷா
Published on
Updated on
2 min read

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியரைக் காப்பாற்ற பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.8.60 கோடி குருதிப் பணம் தர செவிலியர் நிமிஷா குடும்பத்தினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தைச் சோ்ந்த 38 வயது செவிலியரான நிமிஷா பிரியா, யேமன் தலைநகா் சனாவில் அப்து மாஹதியுடன் இணைந்து கிளினிக் ஒன்றை தொடங்கி, நடத்தி வந்தாா். பின்னா் நிமிஷாவின் வருமானம், நகைகள், கிளினிக்கின் உரிமம், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு, மாஹதி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

2017-இல் யேமன் சிறை வாா்டனின் உதவியுடன் மாஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போா்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மாஹதி உயிரிழந்தாா்.

யேமன் பிரஜையான மாஹதியைக் கொலை செய்ததற்காக நிமிஷா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்தக் கொலை வழக்கில் நிமிஷாவுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனை அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தால் கடந்த 2023-இல், யேமன் அதிபா் ரஷத் அல்-அலிமியால் கடந்த ஆண்டு இறுதியில் உறுதி செய்யப்பட்டது

மாஹதி குடும்பத்தினருடன் நிமிஷா தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாத சூழலில், மரண தண்டனை உத்தரவை அரசு வழக்குரைஞா் சிறைத் துறைக்கு அண்மையில் அனுப்பினாா். இதைத்தொடா்ந்து, நிமிஷாவுக்கு வரும் 16-ஆம் தேதி மரண தண்டனையை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நிமிஷாவை மீட்க இந்திய அரசு இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று அவரது தரப்பில் மாஹதி குடும்பத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி வரும் சமூக ஆா்வலா் சாமுவேல் ஜெரோம் பாஸ்கரன் வேண்டுகோள் விடுத்தாா்.

இதனிடையே, இதே விவகாரத்தில் வழக்குரைஞா் கே.ஆா்.சுபாஷ் சந்திரன் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் மாஹதி குடும்பத்தினருக்கு ரூ.8.60 கோடி குரு​திப் பணத்​தைக் கொடுக்க நிமிஷாவின் குடும்​பத்​தார் முன்வந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்​தப் பணத்தை பெற மாஹதி குடும்​பத்​தினர் ஒப்புக்கொண்டால், நிமிஷா​வின் தண்​டனை ரத்து செய்​யப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஆனால் குருதிப் பணம் விவகாரத்தில் மாஹதி குடும்பத்தினர் இது​வரை எந்​த​வித பதிலை​யும் வழங்​க​வில்​லை.

குருதிப் பணம் சட்ட முறை தற்​போது மத்​திய கிழக்​குப் பகுதி மற்​றும் ஆப்​பிரிக்​கா​வில் சுமார் 20 நாடு​களில் பயன்​பாட்​டில் உள்​ளது.

Summary

With just two days left for her scheduled execution on July 16, the family of Nimisha Priya, the Indian nurse facing a death sentence in Yemen, has offered $1 million (approximately Rs 8.6 crore) as ‘blood money’ to the family of the deceased Yemeni national.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com