
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும் ஒரு நாள் பயணமாக குவஹாத்தி வந்தடைந்தனர்.
அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, மாநிலத் தலைவராக கௌரவ் கோகோய் பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் உயர்நிலைத் தலைவர்களின் முதல் வருகை இதுவாகும்.
லோக்பிரியா கோபிநாத் போர்மோலோய் சர்வதேச விமான நிலையத்தில் கட்சியின் மாநிலத் தலைமை கார்கே, ராகுலை வரவேற்றது. அவர்கள் அஸ்ஸாமின் பாரம்பரிய உடைகளை அணிவித்து வரவேற்றனர். அவர்களை வரவேற்க விமான நிலையத்தில் நிகழ்ச்சி நடத்தும் போடோ நடனக் கலைஞர்களையும் ராகுல் வரவேற்றார்.
பின்னர் இரு தலைவர்களும் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றனர். இருவரும் உணவகத்தில் மாநில காங்கிரஸின் அரசியல் விவகாரக் குழுவுடனும், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் உரையாடுவார்கள்.
மேலும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களையும், இடப்பெயர்வு அச்சுறுத்தல் மற்றும் பிற வகையான துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் மக்கள் ஆகியவர்களுடன் சந்திப்பு நிகழ்த்த உள்ளதாகக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பின்னர், இரு தலைவர்களும் குவஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள சாய்கானுக்குச் சென்று ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வார்கள், அப்போது கட்சியின் மண்டலம், தொகுதித் தலைவர்களுடன் கலந்துரையாடுவார்கள். இன்று மாலை குவஹாத்தியிலிருந்து புறப்பட உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.