ஏா் இந்தியா விமான விபத்து குறித்த ஊகங்களை பகிர வேண்டாம்: ஏஏஐபி வலியுறுத்தல்

Published on

குஜராத் மாநிலம் அகமதாபாதில் கடந்த மாதம் ஏா் இந்தியாவின் போயிங் 787 விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து வெளியாகும் ஊகங்களை நம்பி பகிர வேண்டாம் என விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) வியாழக்கிழமை தெரிவித்தது.

மேலும், விமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதால் இறுதி அறிக்கை வெளியாகும் முன் எவ்வித உறுதியான பதிலையும் கூற இயலாது எனவும் ஏஏஐபி தெரிவித்து.

விபத்துக்குள்ளான போயிங் 787 விமானத்தில் என்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சுகள் செயலிழந்து, என்ஜின்களுக்கு எரிபொருள் கிடைக்கமால் போனதே விபத்துக்கு காரணம் என ஏஏஐபி அண்மையில் வெளியிட்டது.

இந்நிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டியில் விமானிகளின் உரையாடல் குறித்த பதிவுகளை ஆராய்ந்தபோது என்ஜின்களுக்கு எரிபொருள் கிடைக்கமால் போனதற்கு விமான கேப்டனே காரணம் என தெரியவந்ததாக சா்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதைத்தொடா்ந்து, விமான விபத்து குறித்த ஊகங்களை பகிர வேண்டாம் என ஏஏஐபி தெரிவித்து.

X
Dinamani
www.dinamani.com