தீர்ப்புகளில் செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடாது: கேரள உயர்நீதிமன்றம்

செய்யறிவு(ஏஐ) பயன்பாடு தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பற்றி....
Kerala High Court
கேரள உயர்நீதிமன்றம்IANS
Published on
Updated on
1 min read

நீதிமன்ற தீர்ப்புகள், உத்தரவுகளில் செய்யறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றங்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்யறிவு தொழில்நுட்பம்(ஏ.ஐ.) இப்போது அனைத்துத் துறைகளிலும் புகுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏஐ பயன்பாடு தொடர்பாக நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஏஐ பயன்பாடு தொடர்பாக ஒரு நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிடுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

அதன்படி, நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளைப் பிறப்பிக்க சாட்ஜிபிடி, டீப்சீக் போன்ற க்ளவுடு செய்யறிவு தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது என்றும் இந்த வழிகாட்டுதல்களை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது ஒரு வழக்கில் தீர்ப்பு முடிவுகளை ஆராயவோ அல்லது தீர்ப்பு உத்தரவுகளை தயார் செய்யவோ ஏஐ கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அதில் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, மேலும் தகவல்கள் வெளியே கசிய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

அதேநேரத்தில் "ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முறையான பயிற்சி வேண்டும். நீதித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். அதுவும் தீர்ப்புகளுக்கு பயன்படுத்தக் கூடாது. இதற்காக நீதித்துறை நடத்தும் பயிற்சிகளில் கலந்துகொண்டு அதுபற்றி தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் அவற்றை ஒருமுறை சரிபார்க்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஏஐ கருவிகளைப் பயன்படுத்தும்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக ஐடி துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.

Summary

The Kerala High Court has ordered courts not to use artificial intelligence tools in court judgments and orders.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com