
குஜராத் மாநிலத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிதிநிலைமைதான் இதற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தம்பதி இருவரும் தங்களது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அகமதாபாத் மாவட்டம் பகோதரா பகுதியைச் சேர்ந்த விபுல் வகேலா (32), கடனில் ஆட்டோ வாங்கியதாகவும், அதனை திரும்ப செலுத்த முடியாமல் அவதியடைந்து வந்த நிலையில்தான் இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
குடும்பத்தில் விபுல் மட்டுமே சம்பாதித்து வந்ததாகவும் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த இவர்களுக்கு கடன் தொல்லை இருந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்து ஐந்து பேரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு, உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், முதற்கட்ட தகவல்கள் நிதிநிலைமையே காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.