பாம்பை வெறும் கைகளால் பிடித்த பாலிவுட் நடிகர் சோனு சூட் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்தார்.
Sonu Sood rescues snake
பாம்பை வெறும் கைகளால் பிடித்த நடிகர் சோனு சூட்.
Published on
Updated on
1 min read

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்தார்.

பாலிவுட் நடிகர் சோனு சூட் சனிக்கிழமை தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் எந்தவித பயமின்றியும் பிடிக்கிறார்.

தொடர்ந்து அந்த பாம்பை பை ஒன்றில் போடுகிறார். பின்னர் குழுவிடம் ஒப்படைத்து, பாம்பை பாதுகாப்பாக காட்டில் விடுமாறு கேட்டுக்கொள்கிறார். தற்போது இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

உ.பி.யில் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபர்!

இதுகுறித்து அவர் கூறுகையில், சங்க வளாகத்திற்குள் பாம்பு வந்ததாகவும், அது ஒரு விஷத்தன்மையற்ற பாம்பு. பாம்புகளை பிடிக்க நிபுணர்களை மட்டுமே அழைக்க வேண்டும். மக்கள் அவற்றைத் தாங்களாகவே பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

Summary

Bollywood actor Sonu Sood shared a video on his social media as he rescued a snake, but urged people to approach professionals in such situations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com