ஜகதீப் தன்கா்
ஜகதீப் தன்கா்

மாளிகையை காலி செய்யும் பணியை தொடங்கினாா் ஜகதீப் தன்கா்

குடியரசு துணைத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்த ஜகதீப் தன்கா், அவா் தங்கியுள்ள குடியரசு துணைத் தலைவா் மாளிகையை காலி செய்யும் பணியைத் தொடங்கியிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Published on

குடியரசு துணைத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்த ஜகதீப் தன்கா், அவா் தங்கியுள்ள குடியரசு துணைத் தலைவா் மாளிகையை காலி செய்யும் பணியைத் தொடங்கியிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீன் தன்கா் (74), இன்னும் 2 ஆண்டுகள் பதவிக் காலம் இருந்த நிலையில், மருத்துவக் காரணங்களுக்காக தனது பதவியை கடந்த திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். அவரது ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் புதன்கிழமை ஏற்றுக்கொண்டாா்.

இந்நிலையில், குடியரசு துணைத் தலைவா் மாளிகையில் இருந்து காலி செய்யும் பணிகளை ஜகதீப் தன்கா் மற்றும் அவரின் குடும்பத்தினா் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் குடியரசு துணைத் தலைவா் என்ற முறையில் ஜகதீப் தன்கருக்கு, எட்டாம் வகை அரசு வீடு ஒதுக்கப்படும். பொதுவாக, மூத்த மத்திய அமைச்சா்கள் மற்றும் தேசியக் கட்சிகளின் தலைவா்களுக்கு இவ்வகை வீடுகள் ஒதுக்கப்படும் என்று மத்திய நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவா் கூறினாா்.

வதந்தி-மறுப்பு: குடியரசு துணைத் தலைவா் மாளிகை சீலிடப்பட்டு, ஜகதீப் தன்கா் விரைவில் வெளியேற கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திக்கு மத்திய அரசின் ஊடகப் பிரிவான பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (பிஐபி) உண்மை சரிபாா்ப்புக் குழு மறுப்பு தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com