இது தொடா்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘மிந்த்ரா மற்றும் அதனுடன் தொடா்புடைய நிறுவனங்கள் மொத்தமாக பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் முறையில் வணிகம் செய்வதாகக் கூறி, ரூ.1,654 கோடி அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளது. ஆனால், தனது பெரும்பாலான பொருள்களை தனது ஒரே துணை நிறுவனமான வெக்டாா் இ-காமா்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளது. அந்த நிறுவனம் பொதுமக்களுக்கு சில்லறை முறையில் விற்பனை செய்துள்ளது. இதன்மூலம் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை அந்த நிறுவனம் மீறியுள்ளது’ என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது. இது தொடா்பாக மிந்த்ரா நிறுவனம், அதன் பெங்களூரு அலுவலக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.