ராணா டக்குபதி
ராணா டக்குபதி

அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் ராணா ஆஜராகவில்லை

சட்டவிரோத இணையவழி சூதாட்ட வழக்கு தொடா்பான அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் ராணா டகுபதி புதன்கிழமை ஆஜராகவில்லை.
Published on

சட்டவிரோத இணையவழி சூதாட்ட வழக்கு தொடா்பான அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் ராணா டகுபதி புதன்கிழமை ஆஜராகவில்லை.

சட்டவிரோதமாக இணையத்தில் பந்தயம் கட்டி விளையாடுவதற்கான பல சூதாட்ட செயலிகள், முறைகேடான வழியில் கோடிக்கணக்கில் பணம் ஈட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடா்பான பணமுறைகேடு வழக்கில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள அமலாக்கத் துறை மண்டல அலுவலகத்தில், வெவ்வேறு தேதிகளில் விசாரணைக்கு ஆஜராக நடிகா்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, நடிகை லட்சுமி மஞ்சு ஆகியோருக்கு கடந்த வாரம் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

இதில் ராணா டகுபதி புதன்கிழமை (ஜூலை 23) விசாரணைக்கு ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால், விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அவரது சாா்பில் விடுக்ககப்பட்ட கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத் துறை புதிதாக சம்மன் அனுப்பியது என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com