4,078 நாள்கள் பிரதமராக..! நீண்ட நாள் பதவி வகித்த இந்திரா காந்தி சாதனையை முறியடித்த மோடி!

நீண்ட நாள் பதவி வகித்த இந்திரா காந்தி சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளதைப் பற்றி...
பிரிட்டன் வாழ் இந்தியர்களுடன் பிரதமர் மோடி.
பிரிட்டன் வாழ் இந்தியர்களுடன் பிரதமர் மோடி.
Published on
Updated on
1 min read

இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக நீண்ட காலம் பணியாற்றிய 2-வது பிரதமர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி தனது பதவி காலத்தில் வெள்ளிக்கிழமையான ஜூலை 25 ஆம் தேதியுடன் 4,078 நாள்களை நிறைவு செய்துள்ளார். இதன் மூலம், முன்னாள் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் பதவிக்காலமான, தொடர்ச்சியாக 4,077 நாள்கள் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்திருந்த சாதனையை முறியடித்துள்ளார்.

1966 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி முதல் 1977 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி வரை இந்திரா காந்தி தொடர்ச்சியாக பிரதமராகப் பதவி வகித்திருந்தார்.

இந்த மைல்கல் சாதனையுடன், பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய 2-வது பிரதமர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர், காங்கிரஸ் கட்சியைச் சேராத மற்றும் ஹிந்தி பேசும் மாநிலத்தில் அல்லாத ஒருவர், நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்த சிறப்பையும் பிரதமர் மோடி பெற்றிருக்கிறார்.

மேலும், 1971 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திரா காந்திக்குப் பிறகு முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்த முதல் பிரதமரும் இவரே. மறைந்த முன்னாள் பிரதமர் நேருவைத் தவிர்த்து தொடர்ச்சியாக மூன்று முறை ஹாட்ரிக் வெற்றி பெற்ற பிரதமரும் மோடிதான்.

2002, 2007, 2012 ஆகிய ஆண்டுகளில் குஜராத் பேரவைத் தேர்தலில் வெற்றியும், 2014, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல்கள் என தொடர்ச்சியாக ஆறு தேர்தல்களில் ஒரு கட்சியின் தலைவராக, இந்தியாவின் அனைத்து பிரதமர்கள் மற்றும் முதல்வர்களில் ஒரே தலைவர் என்ற பெருமையும் மோடியே தன்வசம் வைத்துள்ளார்.

Summary

Narendra Modi Becomes 2nd Longest Serving PM, Breaks Indira Gandhi's Record

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com