ஆபரேஷன் சிந்தூர்
ஆபரேஷன் சிந்தூர்

பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெறும் ‘ஆபரேஷன் சிந்தூா்’!

பள்ளிப் பாடப் புத்தகங்களில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ குறித்த தகவல்கள் இடம்பெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Published on

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான கவுன்சில் (என்சிஇஆா்டி) தயாரிக்கும் பள்ளிப் பாடப் புத்தகங்களில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ குறித்த தகவல்கள் இடம்பெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மொத்தம் 8 முதல் 10 பக்கங்கள் வரை இரு பகுதிகளாக இந்தத் தகவல்கள் சோ்க்கப்படவுள்ளன.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘3-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை மற்றும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை என இரு பகுதிகளாக ஆபரேஷன் சிந்தூா் குறித்த தகவல்கள் என்சிஇஆா்டி தயாரிக்கும் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெறவுள்ளன.

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள், தூதரக ரீதியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து மாணவா்கள் அறிந்துகொள்ளவே ஆபரேஷன் சிந்தூா் குறித்த தகவல்கள் பாடப் புத்தகங்களில் சோ்க்கப்படவுள்ளன.

இதுதவிர அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா பயணித்தது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்பான ‘மிஷன் லைஃப்’ குறித்த தகவல்களும் இடம்பெறவுள்ளன’ எனத் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com