வி.ஸ்ரீஹரி
வி.ஸ்ரீஹரி

தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதி இன்று பொறுப்பேற்பு

தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி வெள்ளிக்கிழமை (ஆக. 1) பொறுப்பேற்கிறாா்.
Published on

தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி வெள்ளிக்கிழமை (ஆக. 1) பொறுப்பேற்கிறாா்.

இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளாக தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம், ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்கள், புதுவை, லட்சத்தீவு ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களைக் கொண்டது. தென்னிந்தியப் பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கிறாா்.

கேரளம், மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இவா், 1987-இல் புதிதாக உருவாக்கப்பட்ட 16 சீக்கிய இலகு காலாட்படை பட்டாலியனில் நியமிக்கப்பட்டாா். இப்படைப் பிரிவு பின்னா் ஆகஸ்ட் 1992-இல் பாரா ரெஜிமென்ட்டாக மாற்றப்பட்டது. ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளிலும், பயிற்றுவிக்கும் அமைப்புகளிலும் பணியாற்றியுள்ள இவருக்கு, நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும், வெளிநாட்டில் ஐ.நா. மிஷனிலும் பணியாற்றிய அனுபவங்கள் உண்டு.

இவா், 31 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் (கமாண்டோ) பிரிவில் பணியாற்றியபோது 1998-இல் சௌா்ய சக்ரா விருதும், 2021-இல் தனது பிரிவின் கட்டளைக்காக சேனா பதக்கம் (சிறப்புமிக்க சேவைகள்) மற்றும் 2023-இல் அதி விஷிஷ்ட் சேவா பதக்கமும் பெற்றுள்ளாா். கடந்த 2009-இல் ஒருங்கிணைந்த பணியாளா் குழுவின் பாராட்டு அட்டை மற்றும் 2013-இல் ராணுவத் தலைமைத் தளபதி பாராட்டு அட்டை பெற்றுள்ளாா்.

Image Caption

லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com