
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், “அடுத்தாண்டுக்குள் மமதா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்படும். மமதா பானர்ஜியின் முதல்வருக்கான பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டுக்குள் முடிவடையப் போகிறது.
இந்திய ஆயுதப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மமதா பானர்ஜி ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவர் இந்தியாவில் உள்ள பல்வேறு தாய்மார்கள் மற்றும் பெண்களின் உணர்வுகளை அவமதித்துள்ளார்.
நீங்கள் இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை எதிர்க்கவில்லை. கோடிக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கையுடன் விளையாடியுள்ளீர்கள். மேற்கு வங்க பெண்கள், வரவிருக்கும் தேர்தல்களில், ஆபரேஷன் சிந்தூரை எதிர்ப்பவர்களுக்கு, செந்தூரத்தின் மதிப்பை விளக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க வந்துள்ளேன்.
பயங்கரவாதிகளின் மரணம் மமதாவுக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. முஸ்லிம்கள் வாக்கு வங்கியைப் பெறுவதற்காகவே மமதா பானர்ஜி ஆபரேஷன் சிந்தூருக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்” என்றார் அமித் ஷா.
இதையும் படிக்க: எந்த அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது: முதல்வர் ஸ்டாலின் உறுதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.