அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார் கௌரவ் கோகோய்!

அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவராக கௌரவ் கோகோய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து புதிய தலைமைத் தொடங்கியுள்ளது.
கௌரவ் கோகோய்
கௌரவ் கோகோய்
Published on
Updated on
1 min read

அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவராக மக்களவை எம்.பி. கௌரவ் கோகோய் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், கட்சியை வழிநடத்த கோகோய் தயாராக உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஏஐசிசி பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங் மற்றும் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேபப்ரதா சைகியா உள்ளிட்ட மூத்த கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் தருண் கோகோயின் மகனான கௌரவ் கோகோய் இப்போது மக்களவை காங்கிரஸ் குழுவின் துணைத் தலைவராக உள்ளாா். அஸ்ஸாமில் கடந்த இரு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இதனால், அடுத்த ஆண்டு தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் காங்கிரஸ் இப்போதே நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதில் முதல் முக்கிய நடவடிக்கையாக அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த பூபேன் குமார் போரா மாற்றப்பட்டு, கௌரவ் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியை வழிநடத்திய அவர், கௌரவ் கோகோயிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

காங்கிரஸின் மாநிலப்பிரிவுத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு கோகோய் காமாக்யா தேவி கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார்.

பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோகோய்,

கட்சி அதன் சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய சித்தாந்தத்தால் தொடர்ந்து ஈர்க்கப்படும். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு முதல் ஹிதேஷ்வர் சைகியா மற்றும் தருண் கோகோய் வரையிலான தலைவர்களின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, நாங்கள் ஒன்றாகக் கட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்வோம் என்று அவர் கூறினார்.

கடந்த வாரம் கோகோய் புதிய மாநிலத் தலைவராகக் கட்சியின் மத்தியத் தலைமையால் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கௌரவ் கோகோயின் பிரிட்டிஷ் மனைவிக்குப் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அவரை தாக்கிப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com