
மத்தியப் பிரதேசத்தின், இந்தூரில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
நாட்டில் கரோனா தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 564 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4,866 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 4,302 ஆக இருந்தது. கரோனா பாதித்தவர்களில் மேலும் 7 பேர் பலியாகியுள்ளனர்.
கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் தில்லியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 17 ஆக உயர்ந்துள்ளது.
புதியதாகப் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பெண்கள், நான்கு ஆண்களும் அடங்குவர். அவர்களில் மூவர் சமீபத்தில் உத்தரப் பிரதேசம், ஒடிசா மற்றும் கேரளத்துக்குப் பயணம் செய்ததாக மாவட்ட தொற்றுநோயியல் நிபுணர் அன்ஷுல் மிஸ்ரா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
இந்தூரில் மொத்தம் 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் யாருக்கும் நோயின் கடுமையான அறிகுறிகள் இல்லை. அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜனவரி 1 முதல், இந்தூரில் மொத்தம் 33 கரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன, இதில் 74 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏப்ரலில் இறந்த இவர் ஏற்கெனவே கடுமையான சிறுநீரக பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.