
சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ.40 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பிஜப்பூர் மாவட்டத்திலுள்ள இந்திராவதி தேசிய பூங்காவில், மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர்கள் உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதில், மாவோயிஸ்ட் தலைவர் சுதாகர், தெலங்கானா மாநில ஆணைய உறுப்பினர் பண்டி பிரகாஷ், தண்டகாரன்யா சிறப்பு ஆணையத்தின் உறுப்பினர் பாப்பா ராவ் மற்றும் அவர்களது ஆயுதம் ஏந்திய கூட்டாளிகள் ஆகியோரின் நடமாட்டம் உள்ளதாகக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் சிறப்பு அதிரடி படை, மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் சத்தீஸ்கர் மாநில காவல் படை, கோப்ரா படை ஆகிய படையினர் இணைந்து, இன்று (ஜூன் 4) மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவர் கௌதம் (எ) சுதாகர் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவரது மரணம் குறித்து பாதுகாப்புப் படையினர் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு மாவோயிஸ்ட் அமைப்பின் பொதுச்செயலாளர் நம்பலா கேஷவ் ராவ் (எ) பசவராஜு என்பவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: எத்தனால் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை! 12 பேர் கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.